5 மொழி படத்தில் சமந்தா

சென்னை: ஐந்து மொழிகளில் உருவாகும் யசோதா என்ற படத்தில் நடிக்கிறார் சமந்தா.விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்திருக்கிறார், சமந்தா. அடுத்து தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்தியில் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்கிறார். இதற்கிடையே தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் உருவாகும் யசோதா என்ற படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார்.

பூஜையுடன் யசோதா படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கப்பட்டு உள்ளது. தேவி மூவிஸ் பேனரில் சிவலேகா கிருஷ்ண பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார். திரில்லர் கதை கொண்ட படமாக உருவாகும் இதை ஹரி, ஹரீஷ் இணைந்து இயக்கு கின்றனர். சமந்தா எழுத்தாளராக நடிக்கிறார். மணிசர்மா இசையமைக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடந்து வருகிறது.

Related Stories:

More