இந்தூர் பாஜ எம்எல்ஏவுக்கு கேத்ரினாவுடன் திருமணம் நடந்ததா?: போலி திருமண சான்றிதழால் பரபரப்பு

இந்தூர்: பிரபல பாலிவுட் நடிகை கேத்ரினா கைப்புக்கும், நடிகர் விக்கி கவுஷலுக்கும் வரும் 9ம் தேதி ராஜஸ்தானில் திருமணம் நடைபெற உள்ளது. அதனால், மும்பையில் இருந்து இருவீட்டாரும் நேற்று ராஜஸ்தான் வந்து சேர்ந்தனர். இந்நிலையில் கேத்ரினாவுக்கும், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பாஜ எம்எல்ஏ ரமேஷ் மெண்டோலா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்ததாக நேற்று சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவின. மேலும், திருமணம் நடந்ததற்கான திருமணப் பதிவு சான்றின் நகலும் சமூக வலைத்தளத்தில் பரப்பி விடப்பட்டன.

இந்தூர் மாநகராட்சியின் திருமணப் பதிவாளர் நட்வர் சர்தா கூறுகையில், ‘ஊடகங்களில் காட்டப்படும் திருமண சான்றிதழ் போலியானது. மாநகராட்சி நிர்வாகத்தால், அந்த திருமண சான்றிதழ் வழங்கப்படவில்லை. யாரோ ஒருவரது திருமண சான்றிதழை ஸ்கேன் செய்து, அதில் பெயர்களை மாற்றி வெளியிட்டு இருக்கின்றனர். தற்போது இது தொடர்பாக போலீசில்  புகார் அளித்திருக்கிறோம். அவர் கள் விசாரித்து வருகின்றனர்’ என்றார்.

Related Stories: