ரஜினியை சந்தித்தார் சசிகலா

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை சசிகலா சந்தித்து பேசினார்.சென்னை போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு நேற்று முன்தினம் திடீரென்று சசிகலா வந்தார். அவர் ரஜினியை சந்தித்து பேசினார். அப்போது லதா ரஜினிகாந்த் உடனிருந்தார். இந்த சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ரஜினியுடன் சசிகலா பேசியதாக கூறப்படுகிறது. இதுபற்றி சசிகலா தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘சமீபத்தில் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கவே சசிகலா அவரை சந்தித்தார். மேலும், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக அவரை சந்தித்து வாழ்த்தினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More