ரூ.10 கோடி நில அபகரிப்பு செய்த இருவர் கைது

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் மலகானந்தபுரத்தை சேர்ந்தவர் சத்தியசீலன்(68). இவர், தனக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள 73 செண்ட் காலி மனையை போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள்மாறாட்ட நபர்கள் மூலமாகவும் அபகரித்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த அய்யனார்(58), வெங்கடாசலம்(49) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், போலி அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து அரவிந்தன் மற்றும் ஜான்செந்தில் என்பவர்களுக்கு கிரையம் செய்து கொடுத்ததும், அதன்மூலம் ரூ.50 லட்சம் வரை பணம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More