எஸ்எஸ்ஐயை தாக்கி செல்போன் பறிப்பு வாலிபர்களுக்கு வலை

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலைய எஸ்எஸ்ஐ ரவீந்தரன்(59). இவர் கடந்த மாதம் 23ம்தேதியில் இருந்து மருத்துவ விடுப்பில் உள்ளார். ரவீந்திரன் நேற்று முன்தினம் இரவு தனக்கு தெரிந்து ஷபி என்பவரின் ஆட்டோவில் கிரீம்ஸ் சாலையில் உள்ள ஓட்டலுக்கு  சென்றுள்ளார். அப்போது ஆட்டோவில் டிரைவர் ஷபி மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் சதீஷ் ஆகியோர் ஷபியிடம் இருந்து மது பாட்டிலை பிடுங்கி குடித்துள்ளனர். அப்போது டிபன் வாங்கி வந்த எஸ்எஸ்ஐ ரவீந்திரன் அந்த 2 வாலிபர்களையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. உடனே போதையில் இருந்த சதீஷ், ரவீந்திரனை தாக்கிவிட்டு அவரின் செல்போனை பறித்து கொண்டு தனது நண்பன் மணிகண்டனுடன் ஓடவிட்டான். இதுகுறித்து ரவீந்திரன் ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் தப்பி ஓடிய சதீஷ் மற்றும் மணிகண்டனை தேடி வருகின்றனர்.

Related Stories:

More