மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,400 கன அடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,400 கன அடியாக சரிந்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 25,400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 16,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

Related Stories: