உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதா: மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி பேச்சு

டெல்லி: உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின் மீது மக்களவையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மக்களவையில் பேசிய அவர் நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அநீதி இழைக்கப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜீ பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதில் இது பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தென் இந்தியாவில் உச்சநீதிமன்ற கிளையை உருவாக்கவும், நீதிபதிகளின் நியமனத்தில் இடஒதுக்கீடை முறையாக அமல்படுத்த வேண்டும் எனவும், கொலிஜியம் முறை ஜனநாயகப்பூர்வமானதாக இல்லை என கூறி இதனை ரத்து செய்து விட்டு ஜனநாயகப்பூர்வமானதான முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் கூறியுள்ளார்.

Related Stories:

More