பெங்களூரை அதிர வைக்கும் பெண் காவலர்கள்

நன்றி குங்குமம் தோழி

'We  for  Women'

முழுக்க முழுக்க பெண் காவலர்களைக் கொண்டு “மோட்டார் சைக்கிள் ரைடிங் படையை” பெங்களூர் காவல் துறை, ராயல் என்பீல்டு நிறுவனத்துடன் கை கோர்த்து உருவாக்கி இருக்கிறது. இந்த படைக்கு ‘We for Women’ எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம், ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan), இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மற்றும் கிளாசிக் 350 சிக்னல்ஸ் (Classic 350 Signals) போன்ற மாடல் பைக்குகளை, ‘வி பார் வுமன்’ திட்டத்தின் கீழ் பெங்களூர் மகளிர் காவலர்களுக்கு வழங்கி  உள்ளது.

இந்தத் திட்டத்திற்காக மோட்டார் சைக்கிள் ரைடிங்கிள் அதிகம் ஆர்வம் கொண்ட 15 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ராயல் என்பீல்டு நிறுவனத்தை சேர்ந்த சிறப்புக் குழுவினரின் மேற்பார்வையில் இரண்டு கட்டங்களாக பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. பெங்களூர் டிராபிக் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மோட்டார் சைக்கிளை ஓட்ட முதல் கட்டப் பயிற்சி வழங்கப்பட்டதோடு, தொழில்முறை ரைடிங் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

பெங்களூரை குழந்தைகள் மற்றும் மகளிருக்கு பாதுகாப்பு உள்ள நகராக உருவாக்கும் பணிகளை இந்த படையினர் மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாராட்டைப் பெற்ற இந்தப் பெண்கள் படையினை மேலும் விரிவாக்கம் செய்யும் அடுத்தகட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. குழந்தைகள் மற்றும் மகளிர் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் சூழலில், அவர்களின் பாதுகாப்பை முன்நிறுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: