நெல்லை விடுதியில் 17 வயது மாணவி பலாத்காரம்: பிரபல ரவுடி கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லம் கோளியூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (23). பிரபல ரவுடி. அவர் மீது கோவளம், விழிஞ்ஞம், பூஜப்புரா, வலியதுரை ஆகிய காவல் நிலையங்களில் 16க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் பிரகாஷ் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவியை கடத்தி சென்றதாக விழிஞ்ஞம் போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், பிரகாஷ் கலிங்கராஜபுரத்தில் உள்ள லாட்ஜில் மாணவியுடன் தங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று பிரகாசை கைது செய்தனர். அவரது பிடியில் இருந்த மாணவியை மீட்டனர். விசாரணையில், மாணவியை ரவுடி பிரகாஷ் ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று நாகர்கோவில், திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட இடங்களுக்கு பலமுறை அழைத்து சென்று அங்குள்ள லாட்ஜிகளில் அறை எடுத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

Related Stories: