பண்ருட்டியில் பொது சுகாதார வளாகத்தை சீரமைக்க கோரிக்கை

பண்ருட்டி: பண்ருட்டி பிடிஎஸ் மணி நகரில் கடந்த 15 வருடத்திற்கு முன்பு மக்கள்தொகை பெருக்கத்தாலும், இட நெருக்கடியாலும் பொதுமக்கள் வெளியில் சென்று இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருந்தனர். இதனை கருத்தில் கொண்டு பண்ருட்டி நகராட்சியின் மூலம் அவர்களுக்கு ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக தண்ணீர் மற்றும் மின்சார வசதியுடன் பொது சுகாதார வளாக மையம் அமைத்து கொடுத்தது.

அது சில ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்ததால் அப்பகுதி மக்கள் மன நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியின் போது அதிகாரிகள் அவைகளை கண்டுகொள்ளாமல் விட்டதால் அந்த சுகாதார வளாகம் பாழடைந்து, முட்புதர்கள் மண்டி போனது.

இதுபோன்று திருவதிகை, பண்ருட்டி அங்காளம்மன் கோவில் தெரு என பல இடங்களில் பொது சுகாதார கழிப்பிடங்கள் பாழடைந்து கிடக்கிறது. இதனால் லட்சக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீண் அடிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவைகளை அடையாளம் கண்டு கணக்கீடு செய்து மறுசீரமைப்பின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: