பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார். இவரது மனைவி செல்வராணி(36). இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். இந்தநிலையில் செல்வராணி மூன்றாவது முறையாக கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான செல்வராணிக்கு கடந்த 4ம் தேதி இரவு வீட்டில் இருக்கும்போது பிரசவ வலி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அக்கம்பக்கத்து பெண்கள் உதவியுடன் வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்தது. பின்னர் திடீரென செல்வராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் அவரையும், குழந்தையையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.