இந்திய நீதித்துறையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் தலையிட வேண்டாம் என்று மக்களவையில் தயாநிதி மாறன் வலியுறுத்தல்

டெல்லி: இந்திய நீதித்துறையில் ஒன்றிய ஆட்சியாளர்கள் தலையிட வேண்டாம் என்று மக்களவையில் தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். நீதித்துறையில் ஆட்சியாளர்கள் செல்வாக்கு செலுத்துவதாக சாதாரண மக்களுக்கு சந்தேகம் உள்ளதாக தயாநிதி மாறன் பேசியுள்ளார். மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் நீதித்துறையில் அரசு தலையிட வேண்டாம் என்று தயாநிதி மாறன் வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்ற, ஐகோர்ட் நீதிபதிகள் சம்பளம், பணி நிலைமை திருத்த மசோதா மீதான விவாதத்தில் தயாநிதி மாறன் பேசியுள்ளார். நீதித்துறை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம், ஆனால் அண்மை நிகழ்வுகள் மக்களிடம் சந்தேகங்களை எழுப்பி உள்ளன. அரசுக்கு ஆதரவான தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளுக்கு பணி ஓய்வுக்கு பிறகு பதவிகள் வழங்கப்படுகின்றன.

Related Stories:

More