லத்தூர் ஒன்றியக்குழு தலைவராக சுபலட்சுமி பாபு பதவியேற்பு

செய்யூர்: தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதைத்தொடர்ந்து  கடந்த அக்டோபர்  22ம் தேதி 9 மாவட்டங்களில் உள்ள ஒன்றியக்குழு தலைவர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இந்த  தேர்தலின்போது லத்தூர் ஒன்றியத்தில் தேர்தல் குளறுபடி காரணமாக தேர்தல் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 29ம்தேதி ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தல் நடந்தது. திமுக சார்பில் போட்டியிட்ட சுபலட்சுமி பாபு வெற்றிபெற்றார். இந்நிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று  நடந்தது.

நிகழ்ச்சியின்போது, வெற்றிபெற்ற ஒன்றியக்குழு தலைவர் சுபலட்சுமி பாபுவிற்கு, பவுஞ்சூர் பஜார் பகுதியில்  வானவேடிக்கை, மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ஒன்றியக்குழு தலைவர் சுப்புலட்சுமி பாபு, கோப்புகளில் கையெழுத்திட்டு தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பூமகள்தேவி, ஜெயபால் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், லத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, மாவட்ட துணை செயலாளர் தசரதன்,

பொதுக்குழு உறுப்பினர் புதுப்பட்டு மோகன் தாஸ், கலைஇலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் குப்புசாமி, ஒன்றிய துணை செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய பொருளாளர் ரங்கநாதன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அருண்மொழிவர்மா, வார்டு கவுன்சிலர்கள்,  திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ஒன்றியக்குழு தலைவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories:

More