காதலியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம்: வாலிபர் கைது

தாம்பரம்: காதலியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்லாவரம் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண், கடந்த 30ம் தேதி தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில்,’எனது அத்தை மகனான  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துச்சாமி (30) என்பவரும், நானும் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக காதலித்து வந்தோம். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு எனக்கு தெரியாமல் வேறொரு பெண்ணை முத்துசாமி திருமணம் செய்துகொண்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

மகளிர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, முத்துச்சாமி இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பதுங்கி இருந்த முத்துச்சாமியை  கைது நேற்று தாம்பரம் அழைத்து வந்தனர்.  பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More