தேர்வு விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பாருங்கள்: ரயில்வே வாரியம் அறிவிப்பு

சென்னை: முதலாம் நிலை கணினி தேர்வு முடிவுகளை ஆர்ஆர்பி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே பார்க்க வேண்டும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: முதலாம் நிலை கணினி அடிப்படையிலான தேர்வுக்கான (CBT-1) முடிவுகள் 2022ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதியன்று அறிவிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

அதேபோல் முதலாம் நிலை கணினி அடிப்படையிலான தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான 2வது நிலை கணினி அடிப்படையிலான தேர்வை (CBT-2) 2022ம் அண்டு பிப்ரவரி 14-18 தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் ஆர்.ஆர்.பி அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்று இந்திய ரயில்வே கேட்டுக்கொள்கிறது.

Related Stories:

More