பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி அங்காடியில் தக்காளி உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலை குறைவு: காய்கறிகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம்

சென்னை: சென்னையில் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலமாக ஒரு கிலோ தக்காளி ரூ.73-க்கு விற்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி அங்காடியிலிருந்து தக்காளி உள்ளிட்ட பிற காய்கறிகள் திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம் ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பிற சந்தைகளுடன் ஒப்பிடுகையில் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடையில் விலை குறைவு என்பதால் மக்கள் அங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மற்ற இடங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்கப்பட்டு வரும் நிலையில் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி அங்காடியில் ஒரு கிலோ ரூ.73-க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அனைத்து காய்கறிகளும் தரமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

More