புதுக்கோட்டை எஸ்ஐ கொலை வழக்கில் கைதான 3 பேருக்கு காவல் நீட்டிப்பு.!

புதுக்கோட்டை: திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் பூமிநாதன். இவர் கடந்த மாதம் 20ம் தேதி ஆடு திருடர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக  தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே தோகூரை சேர்ந்த மணிகண்டன் (19) மற்றும் அவரது உறவினரான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 14 வயது, 9 வயது சிறுவர்கள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கீரனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான மணிகண்டன் திருமயம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவர்கள் 2 பேரும் திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கைதான 3 பேருக்கும் நேற்றுடன் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது. இதையொட்டி மணிகண்டனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கீரனூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் நீதிமன்ற காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி பிச்சைராஜன் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மணிகண்டனை மீண்டும் திருமயம் சிறையில் போலீசார் அடைத்தனர். இதேபோல கைதான 2 சிறுவர்களும் புதுக்கோட்டை இளைஞர் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் அவர்களுக்கும் வரும் 20ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவர்கள் மீண்டும் திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

Related Stories:

More