சூப்பர் சரவணா ஸ்டோரில் நடந்த சோதனை.! ரூ.1000 கோடி வருவாய் மறைப்பு; வருமானவரித்துறை தகவல்

சென்னை: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினத்தில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.1000 கோடி வருவாய் மறைப்பு தெரியவந்துள்ளதாக வருமானவரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 2 நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் நடந்த சோதனையில் ரூ.10 கோடி, ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ததாக வருமானவரித் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை தியாகராய நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் ஆகிய பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் கடைகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமானவரித்துறையினர் 4 நாட்கள் சோதனை நடத்தினர்.

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் நடந்த சோதனையில்ரூ.1000 கோடி அளவுக்கு விற்பனையை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.80 கோடி போலி போட்டது அம்பலம். ரூ.150 கோடிக்கு கணக்கில் கொள்முதல் செய்யப்பட்டது வரவு வைக்காததும் தெரியவதுள்ளது. மேலும், 2 நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் நடந்த சோதனையில், ரூ.10 கோடி, ரூ.6 கோடி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: