வேலூர் லாங்கு பஜாரில் விற்பனைக்கு பதுக்கிய ₹10 ஆயிரம் மதிப்பு குட்கா பறிமுதல்-3 பேர் கைது

வேலூர் : வேலூர் லாங்கு பஜாரில் உள்ள கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ₹10 ஆயிரம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன், தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை முற்றியிலும் தடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் நேற்று வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பெட்டி கடையில் சோதனை செய்தனர்.

அப்போது, அந்த கடையில், தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது. கடைக்காரரிடம் நடத்திய விசாரணையில், வேலூர் லாங்கு பஜாரில் உள்ள மொத்த விற்பனை கடையில் குட்கா வாங்கி, சில்லரையில் விற்பனை செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து, லாங்கு பஜாரில் உள்ள மொத்த விற்பனை கடையை சோதனைசெய்த போது சுமார் ₹10 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கடையில் இருந்த சுமேர்(32), கிஷோர்(32), ஜித்தந்தர்(28) ஆகிய 3 பேரை கைது செய்து, நடத்திய விசாரணையில், பெங்களூருவில் இருந்து, வாங்கி வந்து, சில்லரை அதிக விலைக்கு குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.

Related Stories:

More