தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கிய கனமழை: பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 8,690 பாசன ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பின..!!

சென்னை: தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 ஏரிகளில் இதுவரை 8,690 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான அணைகள், நீர்த்தேக்கங்கள், பாசன ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எப்போதுமே வறண்டு காணப்பட்ட பாலாற்றில், தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மிக பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் பாசன ஏரிகள் குறித்து பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,

* தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 14,138 ஏரிகளில் இதுவரை 8,690 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பின.

* தமிழ்நாட்டில் 2,989 ஏரிகளில் 75 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.

* 90 நீர்த்தேக்கங்களில் 212 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளதாகவும் இது முழு கொள்ளளவில் 94.5 சதவீதம் என அரசு தகவல் தெரிவித்துள்ளது.

* சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் 89சதவீதமும், செங்குன்றம் ஏரியில் 90 சதவீதமும் நீர் நிரம்பி உள்ளது.

* பூண்டி ஏரியில் 92 சதவீதம், சோழவரம் ஏரியில் 75 சதவீதம், தேர்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது.

* மேட்டூர் அணையில் 100 சதவீதமும், பவானி சாகரில் 99 சதவீதமும், வைகையில் 96 சதவீதமும் நேர் நிரம்பியுள்ளது.

Related Stories:

More