டெல்லி அருகே போராடி வரும் விவசாயிகள் முக்கிய ஆலோசனை!: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவசாய சங்க தலைவர்கள் பேச்சு..!!

டெல்லி: டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவர்களது தொடர் போராட்டம் காரணமாக புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப்பெற்றது. இதற்கான மசோதா, நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தாக்கல் செய்யப்பட்டு திரும்ப பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து எல்லையில் முகாமிட்டு போராடி வருகின்றனர். இந்நிலையில் அடுத்தகட்ட நகர்வு குறித்து டெல்லி - பஞ்சாப் எல்லையான சிங்குவில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதே சிங்குவில் கடந்த 4ம் தேதி சம்யுக்தா கிசான் மோர்ச்சா தரப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் விவசாயிகள் உடைய இதர கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும், போராட்டத்தை திரும்ப பெறுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

Related Stories:

More