மோடி பிரதமராக பொறுப்பேற்றதிலிருந்து எஸ்சி-எஸ்டி மக்கள் மீது தாக்குதல் அதிகரிப்பு-பாரதிய அம்பேத்கர் யோஜன சங்கம் குற்றச்சாட்டு

சித்தூர் : சித்தூரில் நேற்று, கலெக்டர் அலுவலகம் முன்பு அகில பாரதிய அம்பேத்கர் யோஜன சங்கம் மாநில செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் அவர் பேசியதாவது:ஆந்திர மாநில அரசும் மத்திய அரசும் எஸ்.சி.- எஸ்.டி. வகுப்பை சேர்ந்த மக்களுக்கு ஒரு நலத்திட்ட உதவிகள் கூட செய்வதில்லை. மத்திய அரசு வழங்கும் எஸ்சி-எஸ்டி நல திட்ட நிதியை மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகிறார். இதனால் எஸ்சி-எஸ்டி வகுப்பை சேர்ந்த மக்கள் பயன் அடையாமல். பின்தங்கியே உள்ளார்கள். எஸ்சி-எஸ்டி நல திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசு எஸ்சி-எஸ்டி நலத்திட்ட பணிகளுக்கு மட்டுமே நிதியை பயன்படுத்த வேண்டும்.

 அதேபோல் மோடி பிரதமராக பொறுப்பேற்றத்திலிருந்து எஸ்சி-எஸ்டி வகுப்பை சேர்ந்த மக்கள் மீது அதிக அளவு தாக்குதல், கற்பழிப்பு, கொலை உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. அதேபோல் ஆந்திர மாநிலத்திலும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றதிலிருந்து தலித் மக்கள் மீது பல்வேறு தாக்குதல்கள் பலாத்காரங்கள் நடைபெற்று வருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் எஸ்சி-எஸ்டி மக்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களின் நிலங்களை அபகரிப்பது, அவர்களின் வீட்டின் நிலங்களை கப்சா செய்வது உள்ளிட்ட செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

 எஸ்.சி. வகுப்பை சேர்ந்த மக்களின் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் சங்கம் சார்பில் மாவட்டம் முழுவதும் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதேபோல் மத்திய அரசு அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பிசி, எஸ்சி, எஸ்டி மைனாரிட்டி உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அதேபோல் அரசியலில் போட்டியிட பிசி வகுப்பை சேர்ந்த அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். எங்களின் கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக ஏற்க வேண்டும். இல்லை என்றால் மாநிலம் முழுவதும் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார். ஆர்பாட்டத்தில், ஏராளமான சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More