நாமக்கல்லில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

நாமக்கல்: நாமக்கல்லில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அறிவியல் ஆசிரியர் மதிவாணனை கைது செய்து நாமக்கல் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். ஆசிரியர் மதிவாணன் மீது நடவடிக்கை  எடுக்க கோரி மாணவி மற்றும் பெற்றோர்கள் கல்வி அலுவலரிடம் நேற்று புகார் அளித்தனர். பாலியல் தொல்லைக்கு ஆளான மாணவிகள், சக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடைபெறுகிறது. நாமக்கல் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீஸ் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related Stories: