ரஷியா - உக்ரைன் இடையே போர் மூளும் அபாயம் : ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் ஜோபிடன் பேச்சுவார்த்தை!!

மாஸ்கோ : ரஷ்யாவின் எந்த தாக்குதலையும் சமாளிப்போம் என்று உக்ரைன் ராணுவம் சூளுரைத்து இருப்பதால் 2 நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.  ‘நேட்டோ’ என அழைக்கப்படும், ‘வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு’ கடந்த 1949ம் ஆண்டு பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் தொடங்கப்பட்டது. இதில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட உலகின் பலம் வாய்ந்த நாடுகள் இடம் பெற்றுள்ளன.  நட்பு நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும் எதிரி நாடுகளின் மீது கூட்டாக தாக்குதல் நடத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த அமைப்பில் தற்போது உக்ரைன் சேர முயற்சி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவிக்கிறது. ஆனால், ரஷ்யா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் ரஷ்ய அதிபர் புடின் தீவிரமாக எடுத்து வருகிறார். அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த தாக்குதல் நடக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் ரஷியா, உக்ரைன் எல்லையில் தொடர்ந்து வீரர்களை குவித்து வருகிறது. சுமார் 1 லட்சம் ரஷிய வீரர்களை எல்லையில் நிறுத்தி வைத்து இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் நேற்று நடைபெற்ற தேசிய ராணுவ தினத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பேசிய அந்நாட்டு அதிபர், ரஷியாவின் எந்தவித தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமை தங்களுக்கு உண்டு என்று தெரிவித்தார்.

Related Stories: