பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர் கைது

பெரம்பூர்: கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர்  ரம்யா (37, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்று தனது வீட்டின் குளியலறையில் குளித்தபோது, ஜன்னல் வழியாக யாரோ எட்டிப் பார்ப்பதுபோல் இருந்துள்ளது. உடனடியாக வெளியே வந்து பார்த்தபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த சையத் ரிஸ்வான் (22), குளியலறை ஜன்னல் வழியாக எட்டி பார்த்தது தெரியவந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  ரிஸ்வானை பிடித்து கொடுங்கையூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ரிஸ்வானை கைது செய்தனர்.

Related Stories: