மக்களின் குறை கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவு

ஆலந்தூர்: ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட 163, 164, 165வது வார்டு மக்களுக்கான குறைதீர் கூட்டம் ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் நேற்று நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். இதில் மனைப்பட்டா,  ரேஷன் அட்டை, விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். அதை பெற்ற அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மண்டல உதவி கமிஷனர் சீனிவாசன், குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் ஜான்சிராணி, செயற் பொறியாளர் தனசேகரன், உணவு வழங்கல் துறை உதவி கமிஷனர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கூட்டத்தில் பங்கேற்காத வருவாய்த்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மக்கள் குறைதீர் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும், என உத்தரவிட்டார்.ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர்கள் என்.சந்திரன், பி.குணாளன், தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: