மூதாட்டியிடம் செயின் பறித்த பக்கத்து வீட்டுக்காரர் பிடிபட்டார்

அம்பத்தூர்: அம்பத்தூர் சம்தாரியா நகர் முதல் தெருவை சேர்ந்த காதரம்மா (70), கடந்த 3ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்து அங்கு வந்த மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி, காதரம்மா கழுத்தில் கிடந்த 3 சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினார். போலீசார் விசாரணையில், பக்கத்து வீட்டை சேர்ந்த முகம்மது அம்பலம் (40), செயின் பறித்தது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், கடன் தொல்லை காரணமாக மூதாட்டியிடம் செயின் பறித்ததை ஒப்புக்கொண்டார். அவர் வேறு எதேனும் குற்ற செயலில் ஈடுப்பட்டு உள்ளாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

More