பிரபாசுக்கு உடல்நலம் பாதிப்பா?

சென்னை: நடிகர் பிரபாசுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பாகுபலி 2 படத்துக்கு பிறகு சாஹோ படத்தில் பிரபாஸ் நடித்தார். இப்போது ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கும் படம் என ஒரே நேரத்தில் 4 படங் களில் நடித்து வருகிறார். நான்கு படங்களுமே பல மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகின்றன. ஒரே நேரத்தில் 4 படத்தில் நடிப்பதாலும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிலிருந்து இன்னொரு படத்தின் ஷூட்டிங்கிற்கு வெவ்வேறு மாநிலம், நாடு என செல்வதாலும் பிரபாஸின் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி பிரபாசின் நண்பரும் நடிகருமான ஸ்ரீனு கூறும்போது, ‘பிரபாஸ் உடல்நிலை பற்றி பல்வேறு தகவல்கள் உலா வருகிறது. அவர் நலமாக இருக்கிறார். அவரை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்றார்.

Related Stories:

More