ஒரே நாளில் 20 ரவுடிகள் கைது

காஞ்சிபுரம்: டிஐஜி சத்தியப்பிரியா, செய்தியாளர்களிடம் கூறியதாவது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சிபுரம் காவல் சரகத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணிமுதல் நேற்று அதிகாலை வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதையொட்டி, சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் 20 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 13 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. கள்ளச்சாராய வழக்குகள் 103 பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை உட்பட பல்வேறு கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காஞ்சிபுரம் சரகத்தில் முகக்கவசம் அணியாத 440 பேரிடம் தலா ரூ.100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்கள் மீது அபராதம் விதிப்பது தொடரும் என்றார். மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த தேவனேரி மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் பரதன் (32), மீனவர். நேற்று மதியம் பரதன், தேவனேரியில் இருந்து பூஞ்சேரிக்கு பைக்கில் சென்றார். பின்னர் இசிஆர் சாலை வழியாக வீட்டுக்கு புறப்பட்டார். பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் அருகே சென்றபோது, திடீரென பைக், நிலை தடுமாறி சாலையோர தடுப்பில் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட பரதன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். புகாரின்படி மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

*  மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், எஸ்ஐ அசோக சக்கரவர்த்தி மற்றும் போலீசார்  நேற்று அதிகாலையில், இசிஆர் சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வேகமாக வந்த 2 பேரை மடக்கி விசாரித்தனர். ஆனால் அவர்கள், முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், மானாம்பதி அடுத்த முள்ளிப்பாக்கம் கிராமம் திருவள்ளூவர் தெருவை சேர்ந்த மகன் உமேஷ் (19), வினித் (19), என தெரிந்தது. மேலும் விசாரணையில், ஆடுகளை திருடி திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு கறிக்கடைக்காரரிடம் விற்பனை செய்வார்கள். அவர்கள் திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஒன்றியங்களில் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியுள்ளனர் என தெரிந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், முள்ளிப்பாக்கம் கிராமம் திருவள்ளுவர் தெரு சிதியோன் ராஜ் (23), திருக்கழுக்குன்றம் மசூதி தெரு கறிக்கடைகாரர் ஆதம் (53) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: