பாலாற்றில் விழுந்த பெண் மாயம்

மதுராந்தகம்: கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், மதுராந்தகம் அருகே ஈசூர் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதுராந்தகம் ஈசூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (40). நேற்று சாந்தி, பாலாற்று கரைக்கு சென்றார். அங்கு, ஆற்றில் வெள்ளப்பெருக்கை ரசித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது, திடீரென நிலைதடுமாறி அவர், தண்ணீரில் விழுந்து, வெள்ளத்தில் அடித்து சென்றார். தகவலறிந்து மதுராந்தகம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் நீண்ட நேரம் தேடியும் சாந்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமானதால், இன்று காலை தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.

Related Stories:

More