அம்பேத்கர் நினைவு தினம் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

காஞ்சிபுரம்: காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், மாவட்ட அவை தலைவர் சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார். அதிமுக சார்பில் ஓரிக்கை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம் உள்பட பலர் இருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் பாசறை செல்வராஜ், மாவட்ட செய்தி தொடர்பாளர் மதி.ஆதவன், மாவட்ட துணை செயலாளர் திருமாதாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் சார்பில் மேற்கு மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர நிர்வாகிகள் நாதன், அன்பு, பூக்கடை மணிகண்டன்,. சொக்கலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், முன்னாள் மாவட்டத் தலைவர் ஜி.வி.மதியழகன் ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார்.

மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில் பொதுக் குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், உமாசங்கர், வட்ட செயலாளர் கணபதி, இளைஞர் அணி சரவணன், உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை எதிரே உள்ள அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசன் மாலை அணிவித்தார். உடன், நகர செயலாளர் ரவீந்திரன், மகளிரணி மாவட்ட செயலாளர் காஞ்சனா, நகர செயலாளர் மாலினி உள்பட பலர் கலந்துகொண்டனர். புரட்சிபாரதம் மாவட்ட செயலாளர் மூர்த்தி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன், மாவட்ட நிர்வாகி குண்டூர் தாஸ் உள்பட பலர் இருந்தனர். காங்கிரஸ் நகர தலைவர் பாஸ்கர், ரயில்வே எஸ்சி, எஸ்டி யூனியன் மற்றும் ரயில்வே அரசு மருத்துவமனை யூனியன் நிர்வாகிகளும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த காரணையில், அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தொண்டரணி செயலாளர் மல்லை சிறுத்தை வீ.கிட்டு, திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இசிஆர் அன்பு, மாமல்லபுரம் நகர செயலாளர் ஐயப்பன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதேபோல், மாமல்லபுரத்தில் நகர செயலாளர் ஐயப்பன், சிந்தனை சிவா, சாலமன், பிரகாஷ் ஆகியோர் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

திருப்போரூர்: திருப்போரூர் ரவுண்டானா அருகில் அம்பேத்கர் சிலைக்கு திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன், துணைத் தலைவர் சத்யா சேகர், திருப்போரூர் நகர திமுக செயலாளர் தேவராஜ் ஆகியோர் மாலை அணிவித்தனர். அதிமுக சார்பில் முன்னாள் எம்பி மரகதம்குமரவேல், முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார், நகர செயலாளர் முத்து ஆகியோர் மாலை அணிவித்தனர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் திருப்போரூர் நகர தலைவர் தியாகராஜன் உள்பட பலர் மாலை அணிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், விடுதலை நெஞ்சன் உள்பட பலர்  மரியாதை செய்தனர்.

புரட்சி பாரதம் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சிவலிங்கம், தெற்கு மாவட்ட தலைவர் சங்கர், ஒன்றிய செயலாளர் லோகு, பாமக மாவட்ட செயலாளர் காரணை ராதா, நகர நிர்வாகிகள் பூபாலன், பாபு, பெருமாள், அம்பேத்கர் ஜனசக்தி கட்சி தலைவர் விஸ்வநாத், மாவட்ட செயலாளர் தாமோதரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மூத்த நிர்வாகி மனோகரன், ஒன்றிய தலைவர் லிங்கன், மாவட்டக்குழு உறுப்பினர் பகத்சிங்தாஸ், வட்டக்குழு உறுப்பினர்கள் அன்பரசு, வெங்கடேசன், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் செந்தில், நகர செயலாளர் நந்தகுமார், மதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் லோகு, சுரேஷ், நகர செயலாளர் துரை உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் எம்எல்ஏ வீ.தமிழ்மணி, ஒன்றியக்குழு தவைலர் ஆர்.டி.அரசு, துணை தலைவர் எஸ்.ஏ.பச்சையப்பன் ஆகியோர் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

* நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள்

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்ட  நீதிமன்ற வளாகத்தில், அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு கூட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை  நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனாவை கலந்து கொள்ளும்படி, வழக்கறிஞர்கள் அழைத்திருந்தனர். இதனையடுத்து, நேற்று காலை நீதிமன்ற வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு, மாலை அணிவிக்க, மாவட்ட நீதிபதியை வழக்கறிஞர்கள் அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் நீதிபதி, நிகழ்ச்சி நடந்த இடத்துக்கு வராமல், வழக்கறிஞர்களை அலைகழித்ததாக கூறப்படுகின்றது.

இதனால், நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த அம்பேத்கர் சிலைக்கு வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஆனந்தீஸ்வரன், அரசு வழக்கறிஞர்கள் திருமுருகன், தம்பிரான் உட்பட பலர் மாலை அணிவித்து மரியாதை அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, மாவட்ட நீதிபதி இந்நிகழ்ச்சிக்கு வராததால், மற்ற நீதிபதிகளும் இதில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள், அம்பேத்கரின் நினைவு நாளில், அவமரியாதையாக நடந்து கொண்டதாக, மாவட்ட நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்து, ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories: