ஆவடி சிஆர்பிஎப்பில் பயிற்சி முடித்த 125 வீரர்கள் அணிவகுப்பு

ஆவடி: ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பயிற்சி முடித்த வீரர்களுக்கு அணிவகுப்பு மரியாதை அங்குள்ள வளாகத்தில் நேற்று  நடந்தது.  இந்நிகழ்ச்சியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை டி.ஐ.ஜி தினகரன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், அவர் வீரர்களின் செயல்பாட்டை பாராட்டிப் பேசினார். கடந்த 44 வார காலமாக 115 வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின்போது வீரர்களுக்கு ஆயுதங்களை கையாளுதல், பொது அறிவு, ஆளுமை மேம்பாடு, சட்டம், வரைபடங்களை காணுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் பயிற்சி முடித்த தமிழ்நாட்டை சேர்ந்த 28 பேர் உள்ளிட்ட 115 பேரும் காஷ்மீர், சட்டீஸ்கர், அசாம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதில், பயிற்சி பள்ளியின் முதல்வர் கேவல்சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: