கொசஸ்தலை ஆற்றில் மூழ்கியவர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காரணிநிசாம்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் கரையோரம் குடிசை அமைத்து குடும்பத்துடன் வசித்து வந்தவர் பாலாஜி(45). இவர் நேற்று முன்தினம் தனது மைத்துனர் மகன் கார்த்திக்(7) என்ற சிறுவனை அழைத்துக்கொண்டு கொசஸ்தலை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ஆற்றின் வௌ்ளத்தில் சிக்கி 2 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதற்கிடையில், ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சிறுவன் கார்த்திக் மட்டும் முயற்சி செய்து கரை ஏறி தப்பித்து விட்டான். ஆனால் பாலாஜி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி செல்வி(40) திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை ஆற்றில் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று காலை 8 மணியளவில் நாராயணபுரம் அருகே ஆற்றில் பாலாஜியின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: