மலைப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் உதவியுடன் பயிர் செய்த 6 ஆயிரம் ஏக்கர் கஞ்சா தீ வைத்து அழிப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தங்களின் ஆதரவுடன் மலைக்கிராம மக்களை வைத்து கஞ்சா  பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில், கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா விளைச்சல், கஞ்சா கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்க ஆந்திர மாநில அரசு சிறப்பு தனிப்படை போலீசார் ஆபரேஷன் பரிவர்த்தனை திட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கிராமம், மலை பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ேமலும், ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில், 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட கஞ்சா பயிர்களை போலீசார் கண்டறிந்து நேற்று தீ வைத்து அழித்தனர்.  மேலும் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அதனை கணக்கிட்டு அழிக்கும் நடவடிக்ைகயில் இறங்கி உள்ளனர். இதன் பின்னணியில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த கடத்தல்காரர்கள் இங்கு முகாமிட்டு மலைவாழ் மக்களை வைத்து கஞ்சா பயிரிட்டு பல மாநிலங்கள் வழியாக நாடு முழுவதும் கடத்தி சென்று விற்பனை செய்து பல கோடி ரூபாய் ஆதாயம் பார்த்து வருகின்றனர். அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: