‘காஷ்மீர் வலியில் இருக்கிறது’ டெல்லியில் மெகபூபா தர்ணா

புதுடெல்லி: காஷ்மீர் வலியில் இருக்கிறது என்று கூறி முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி டெல்லியில் போராட்டம் நடத்தினார். முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘காஷ்மீரில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்படாததால் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளேன். ஒவ்வொரு முறை நான் போராட்டம் நடத்துவதற்கு திட்டமிடும்போதும் வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறேன் அல்லது போலீசாரால் விரட்டி அடிக்கப்படுகிறேன். காஷ்மீர் சிறைச்சாலையாகி விட்டது. மக்கள் தங்களது கருத்துக்களை கூறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதில் இருந்து காஷ்மீர் மக்கள் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். காஷ்மீர் வலியில் இருக்கிறது. இப்போதும் கூட மக்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால், காந்தியின் நாடு நாதுராம் கோட்சேவின் நாடாக மாறும் நாட்கள் நீண்ட தூரத்தில் இல்லை. அதன் பின் நாம் அனைவரும் உதவியற்றவர்களாக இருப்போம்’ என்றார்.

Related Stories: