கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு எம்எல்ஏக்களின் பிள்ளைகளுக்கு வாரிசுப் பணி வழங்க கூடாது

திருவனந்தபுரம்: எம்எல்ஏக்களின் பிள்ளைகளுக்கு வாரிசு பணி நியமன அடிப்படையில் அரசு வேலை வழங்கக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் செங்கணூர் தொகுதி சிபிஎம் எம்எல்ஏவாக இருந்தவர் ராமச்சந்திரன் நாயர். இவர் 2018ம் ஆண்டு மரணமடைந்தார். இவரது மகன் பிரசாந்துக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து பாலக்காட்டைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமார் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், ‘மறைந்த எம்எல்ஏவின் மகன் பிரசாந்துக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை உடனடியாக ரத்து செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட்டது. எம்எல்ஏ பதவி அரசுப் பணி அல்ல.’ இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளது.

Related Stories:

More