சாதித்த சஞ்சீவி

வங்கதேச தலைநகர் டாக்காவில், சன்ரைஸ் வங்கதேச சர்வதேச சேலஞ்ச் சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடர் நடந்தது. அதன் ஒற்றையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் ரித்விக் சஞ்சீவி, மற்றொரு இந்திய வீரர் அபிஷேக் சைனி மோதினர். அதில் அபிஷேக்  21-15, 21-18 என நேர் செட்களில் வென்றார். சஞ்சீவி 2வது இடம் பிடித்தார். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள ஹட்சன் பேட்மின்டன் மையத்தில் பயிற்சி பெற்று வரும் சஞ்சீவி, சக வீராங்கனை நிலா வள்ளுவனுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவு  அரையிறுதி வரை முன்னேறினார். தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் ரகு மாரிசாமி ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் 18-21, 21-9, 18-21 என்ற செட்களில் கடுமையாகப் போராடி அபிஷேக் சைனியிடம்  தோற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More