மதுரை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த டாக்டர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ரேடியாலஜி துறை இயங்கி வருகிறது. இங்குள்ள ஸ்கேன் அறைக்கு, கடந்த நவ. 26ம் தேதி 26 வயதான இளம்பெண், ஸ்கேன் பரிசோதனைக்காக தாயுடன் வந்தார். அவரை பணியில் இருந்த அரசு மருத்துவமனையின் ரேடியாலஜி துறை டாக்டர் சக்கரவர்த்தி (51) பரிசோதனை செய்தார். அப்போது டாக்டர், பரிசோதனையில் சந்தேகமிருக்கிறது. நாளைக்கு மீண்டும் வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார். மறுநாள் இளம்பெண் மீண்டும் ஸ்கேன் பரிசோதனைக்கு வந்தார்.

அப்போது பெண்ணின் தாயாரையும், நர்சையும் வெளியில் காத்திருக்குமாறு கூறிய டாக்டர் சக்கரவர்த்தி, இளம்பெண்ணை மட்டும் ஸ்கேன் அறைக்குள் அழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் ஸ்கேன் அறையிலிருந்து அழுதபடி வெளியில் ஓடி வந்த இளம்பெண், டாக்டர் தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் எனக்கூறி கதறி அழுதார். இதையடுத்து அறையில் இருந்த டாக்டருடன் பெண்ணின் தாயார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விசாரணை அறிக்கை சென்னை மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து, டாக்டர் சக்கரவர்த்தியை சஸ்பெண்ட் செய்து, மருத்துவக்கல்வி இயக்குநரகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More