தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷனில் பொருட்கள் விநியோகமா? அமைச்சர் சக்கரபாணி மறுப்பு

திருவாரூர்: திருவாரூரில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று அளித்த பேட்டி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும். நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவை செய்து கொடுக்குமாறு தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் 3 லட்சம் மெ.டன் கூடுதலாக குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்தி பொய்யானதாகும். அதுபோன்ற ஒரு அறிவிப்பினை அரசு இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும் ஓமிக்ரான் வைரஸ் பரவிவருவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: