2 மணி நேரத்தில் 276 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது வெள்ளக்காடானது மணப்பாறை

மணப்பாறை: திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை இல்லாத சூழலில் நேற்று காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரத்தில் 276 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ராஜீவ் நகரில் உள்ள அப்பு அய்யர் குளம் உடைந்தது. இந்த வெள்ள நீரானது ராஜீவ் நகர், இந்திரா நகர், மஸ்தான் தெரு, பூமார்க்கெட் வீதி மற்றும் பேருந்து நிலையத்தை சூழ்ந்தது. தீயணைப்பு துறையினர் பேருந்து நிலைய  பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரில் செல்ல முடியாமல் தவித்தவர்களை படகு மூலம்  அழைத்து சென்று விட்டனர். நகரில் 1000 குடியிருப்புகளை மழை வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் சிரமமடைந்தனர். மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழையால் திருச்சி மாவட்டத்தில் அரியாறு மற்றும் கோரையாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: