2 தீவிரவாதிகள் சுற்றிவளைத்து கைது; சீன துப்பாக்கி, கையெறி குண்டு பறிமுதல்: எல்லையில் போலீஸ் அதிரடி

ஸ்ரீநகர்: ஷோபியன் பகுதியில் 2 தீவிரவாதிகளை சுற்றிவளைத்து கைது செய்த பாதுகாப்பு படையினர், அவர்களிடம் இருந்து சீன துப்பாக்கி, கையெறி குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டம் ரம்பி ஆரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீவிரவாதி ஷாஹித் அகமது என்பவன், தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையறிந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து பதிலடி நடத்தி இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

அவர்களிடமிருந்து ஒரு சீன கைத்துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, இரண்டு சீன கையெறி குண்டுகள், எட்டு தோட்டாக்கள், ரூ.2.90 ரொக்கம் ஆகியவை மீட்கப்பட்டன. இதுகுறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட இரண்டு தீவிரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா  அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களில் டும்வானி கிகாமில் வசிக்கும் ஷாஹித் அகமது கெய்ன், பிஞ்சுராவைச் சேர்ந்த அயூப் அலி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: