மட்டன் மிளகு கிரேவி

செய்முறை

முதலில் மட்டனை நன்கு கழுவி, 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். 15 நிமிடம் ஆன பின்னர், குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். பின் அதில் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 15 நிமிடம் அடுப்பில் வைக்கவும். மட்டன் வெந்ததும் இறக்கவும். வாணலியை எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இஞ்சி, கரம் மசாலா மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறவும். இத்துடன் குக்கரில் உள்ள வேக வைத்த மட்டனை சேர்த்து, மிதமான தீயில் நன்கு கிளறவும். 15 - 20 நிமிடம் கழித்து இறக்கவும். டிபன், சாதத்துக்கு ஏற்ற மட்டன் மிளகு கிரேவி ரெடி.

Tags :
× RELATED சப்பாத்தி சில்லி