சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு தினம்: தலைவர்கள் மரியாதை

புதுடெல்லி: டெல்லியில் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்திய அரசியலமைப்பின் சட்ட மாமேதை அம்பேத்கரின் 65வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி  வருகின்றனர். டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலைக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இன்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 1891ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்த அம்பேத்கர், கடந்த 1956ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி காலமானார். இவரது மரணத்திற்கு பிறகு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ கடந்த 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More