ஜனவரி 2வது வாரத்தில் ஐபிஎல் வீரர்கள் ஏலம்

மும்பை: 15வது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ம்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் கூடுதலாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் ஜனவரி 2வது வாரத்தில் நடைபெற உள்ளது.. ஏற்கனவே ஜன. முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்த நிலையில், அகமதாபாத்தை ஏலம் எடுத்த சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு புகார் விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும். பின்னர் 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன் 3 வீரர்களை வாங்கிக்கொள்ள 31ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ந்து ஜன.2வது வாரத்தில் வீரர்கள் பொது ஏலம் நடைபெறும் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More