×

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: பைனலில் குரேஷியாவை வீழ்த்தி 3வது முறையாக ரஷ்யா சாம்பியன்

மாட்ரிட்: ரஷ்யா-குரேஷியா நாடுகள் மோதிய டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் இறுதி போட்டி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நேற்று நடந்தது. இதில் ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ் 6-4, 7-6(5) என குரேஷியாவின் போர்னா கோஜோவையும், 2ம் நிலை வீரரான டேனியல் மெட்வெடேவ், 7-6, 6-2 என மரின் சிலிக்கையும் தோற்கடித்தனர். இதனால் ரஷ்யா 2-0 என்ற கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி 3வது முறையாக பட்டம் வென்றது. இதற்கு முன் 2002, 2006ம் ஆண்டுகளில் ரஷ்யா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.

வெற்றிக்கு பின் மெட்வெடேவ் கூறுகையில், இதுஆச்சரியமாக இருக்கிறது. என்னை விட அணிக்காக நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். எங்களிடம் அற்புதமான அணி உள்ளது, மேலும் எங்களுக்குத் தேவையான புள்ளிகளை வெல்ல அணியின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

Tags : Davis Cup ,Russia ,Croatia , Davis Cup Tennis: Russia defeats Croatia in the final for the 3rd time
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...