எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுடன் திரைப்படம் பார்த்த கலெக்டர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொதுமக்களிடையே சமத்துவத்தை நிலை நிறுத்தும் வகையிலும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவள்ளூர் தனியார் திரையரங்கில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எஸ்பி வருண்குமார் ஆகியோர் பல்வேறு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோடும் அமர்ந்து திரைப்படம் கண்டுகளித்தனர்.

Related Stories: