பிளஸ் 1 மாணவி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் ஆட்டோ டிரைவர் கைது

ஈரோடு: பிளஸ் 1 மாணவியை கர்ப்பம் ஆக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை காரண்டிபாளையத்தை சேர்ந்தவர் கவின்குமார் (19). ஆட்டோ டிரைவர். இவர், பிளஸ் 1 மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதன் மூலம் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், பெருந்துறை போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி கவின்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை நேற்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Related Stories: