சென்னை மருத்துவமனை பெண் ஊழியர் கடத்தல்: திருவண்ணாமலையில் பரபரப்பு

ஆரணி: ஆரணி அருகே மருத்துவமனைக்கு சென்ற பெண் ஊழியர் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக 2 குழந்தைகளின் தந்தை மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். திருமணமாகாத இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். சொந்த ஊருக்கு வந்த அவர், கடந்த 24ம்தேதி மருத்துவமனைக்கு சென்று சம்பளம் வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்னை மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் ேதடினர். எங்கும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தாய் களம்பூர் போலீசில் நேற்று புகார் செய்தார். புகாரில், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தவேலு(38) என்பவர் தனது மகளை கடத்திச்சென்றிருக்கலாம் எனவும், ஆனந்தவேலுவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணையும், கடத்தியதாக கூறப்படும் ஆனந்தவேலுவையும் தேடி வருகின்றனர்.

Related Stories:

More