தஞ்சையில் முறையற்ற உறவால் பிறந்த குழந்தையை கழிவறையில் வீசி கொன்ற தாய் கைது: போலீசார் விசாரணை

தஞ்சை : தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசரசிகிச்சை பிரிவு  கழிவறையில்,கடந்த சனிக்கிழமை பிறந்த சிலமணி நேரமேயான பெண் குழந்தை ஒன்று சடலமாக கண்டுயெடுக்கபட்டது .இது குறித்து விசாரணை நடத்திய  போலீசார் கழிவறை பகுதிக்குள் சென்று வந்தவர் குறித்து  சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர் .அது  தஞ்சாவூர் அருகே  ஆலக்குடி கிராமத்தை சேர்ந்த   திருமணமாகாத பெண் முறையற்ற உறவால் பிறந்த தனது குழந்தையை கழிவறை தொட்டியில் போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றிய பிரியதர்ஷினி என்பவர் தவறான உறவால் கர்ப்பமானதாக தெரிகிறது.ஆலக்குடிக்கு திரும்பிய ப்ரியதர்ஷினிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதை அடுத்து அவரது பெற்றோர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் .வலி அதிகமானதும் பிரசவம் ஆகிவிடும் என தெரிந்த அந்த பெண் கழிவறைக்கு சென்று குழந்தையை பெற்றெடுத்து அதனை கொலை செய்து கழிவறையில் வீசியது விசாரணையில் அம்பலமானது .இதனை அடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் இந்த கொலைக்கு அவரது பெற்றோர் உடந்தையாக இருந்தனரா என விசாரணை நடத்தி வருகின்றனர் .               

Related Stories:

More