×

இந்திய அணி நிர்வாகம் சில நேரங்களில் கடினமான தேர்வு முடிவுகளை எடுக்கலாம்: ராகுல் டிராவிட்

மும்பை: இந்திய அணி நிர்வாகம் சில நேரங்களில் கடினமான தேர்வு முடிவுகளை எடுக்கலாம் எனவும் அவ்வாறு முடிவுகள் எடுக்கும் போது வீரர்களுடன் தெளிவான தொடர்பு இருக்க வேண்டியது அவசியம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 372 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்டமாக வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்திய மண்ணில் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. 3 போட்டிகளிலுமே இந்திய அணி வென்று, டி20 தொடரை மொத்தமாக கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பிறகு பேசிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட்; இந்திய அணி நிர்வாகம் சில நேரங்களில் கடினமான தேர்வு முடிவுகளை எடுக்கலாம் எனவும் அவ்வாறு முடிவுகள் எடுக்கும் போது வீரர்களுடன் தெளிவான தொடர்பு இருக்க வேண்டியது அவசியம்.

இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஒருவருக்கொருவர் போட்டி போட்டிக் கொண்டு விளையாடுவதை பார்க்கும்போது தேர்வு முடிவு ஒரு இனிமையான தலைவலியாக இருக்குமென்றும், எங்களுக்கு அதிக தலைவலி இருப்பதாக நான் நம்புகிறேன், நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும், ஆனால் எங்களிடம் தெளிவான தகவல்தொடர்பு இருக்கும் வரை அதை ஒரு பிரச்சனையாக பார்க்க வேண்டாம் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சர் படேல் பந்து மற்றும் பேட்டிங்கில் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார் அவர் இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியா நியூசிலாந்திற்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க உதவினார் என கூறிய அவர்; ஜெயந்த் யாதவ் இரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கள் உட்பட ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதையும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்; ஆடுகளம் உள்ளிட்ட விஷயங்கள் இந்தியாவுக்கு சாதகமாக இருந்ததால் வெற்றி பெற்றுள்ளாதாகக் கூறுவது தவறு. கான்பூர் டெஸ்டில் கடைசி வரை போராடி வெற்றிபெறாமல் போனதை குறிப்பிட்டார்.

அதிக வாய்ப்புகள் கிடைக்காத மயங்க், ஸ்ரேயாஸ், சிராஜ். அக்சர், உள்ளிட்டோர் சிறப்பக செயல்பட்டது மகிழ்சியாக உள்ளதாகவும், நிறைய நேரம் மற்றும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இரண்டாவது டெஸ்டில் நியுசிலாந்து அணிக்கு பாலோ-ஆன் கொடுக்கவில்லை எனவும் , எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளில் அதனை கையாள்வதற்கு இதுபோன்ற முடிவுகள் முன்னுதாரணமாக இருக்கும் எனவும் கூறினார்.


Tags : Rahul Dravid , Indian team management can sometimes make tough selection decisions: Rahul Dravid
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...